
கோலாலம்பூர், மார்ச் 21 – அண்மையில் சமூக வலைதளத்தில் காஸா (Gaza) போர் தொடர்பாக இஸ்லாம் குறித்து சிறுமைப்படுத்தும் அல்லது அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் Facebook கணக்கின் உரிமையாளர் மற்றும் அதனை கையாளும் நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்றிரவு ஜாலான் துன் ரசாக் (Jalan Tun Razak) போலீஸ் நிலையத்தில் ஒரு தனிநபரின் போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸ் படைத் தலைவரான ரஸாருடின் உசேய்ன் ( Razarudin Husain ) தெரிவித்தாக பெர்னாமா தகவல் வெளியிட்டது.
அந்த அறிக்கையில் முஸ்லீம்களின் கோபத்தைத் தூண்டும் மற்றும் பொதுமக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் கூறுகள் இருப்பதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் 298 A விதி , 1998ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233 ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாக ரஸாருடின் தெரிவித்தார்.
முன்னதாக, மலேசியாவில் உள்ள ராணுவ வீரர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் காசாவுக்கு சவால் விடுத்த ஒரு நபரின் செய்தி முகநூலில் வைரலானது.
மேலும் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட விமர்சனமும் அர்த்தமற்றது என்று அவர் கிண்டல் செய்துள்ளார்.