குயிட்டோ, மே 2 – ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த முன்னாள் அழகுராணி ஒருவர் கியூவேடோவில் ஆயுதமேந்திய இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
La Quadra வணிக மையத்தில், தனது துணையுடன் காலை உணவு எடுத்தக்கொண்டிருந்த 23 வயதுடைய Landy Parraga Goyburo எனும் அந்த இளம் பெண்ணை, ஆயுதங்கள் ஏந்திய இரு ஆடவர்களில் ஒருவர் 6 முறை சுட்டுக் கொன்றுள்ளான்.
போலீசார் தற்போது இந்த சம்பவம் குறித்த விசாரணை நடத்தி, அச்சம்பவத்திற்கான காரணத்தையும் கொலையாளிகளையும் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே Parraga 2022ஆம் ஆண்டில் லாஸ் ரியோஸ் மாகாணத்தை பிரதிநித்த முன்னாள் மிஸ் ஈக்வடார் போட்டியாளர் ஆவார்.
வீட்டுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளரும் சொந்த விளையாட்டு ஆடைகளின் இயக்குநராகவும் இருந்த அவரின் சமூக ஊடக கணக்குகளில், சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின் தொடர்புவர்களைக் கொண்டிருந்தவராவார்.