Latestமலேசியா

ஈப்போவில் கழுத்தில் காயங்களுடன் முதியவரின் சடலம் மீட்பு

ஈப்போ, ஜூலை-3 – பேராக் பெர்ச்சாமில் தனியாருக்குச் சொந்தமான கட்டடமொன்றில் கழுத்தில் காயங்களுடன் முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மரணமடைந்தவர், அங்கு துப்புரவுப் பணியாளராக வேலை செய்யும் 81 வயது யெப் நாம் மெங் (Mayat Yep Nam Meng) என அடையாளம் கூறப்பட்டது.

அந்த 8 மாடி கட்டடத்தின் கீழ் தளத்தில் வாசல் கதவருக்கே அவர் இறந்து கிடந்தார்.

11 ஆண்டுகளாக அக்கட்டடத்தில் பணிபுரிந்து வரும் அவ்வாடவரின் சடலம் சவப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

எனினும், குற்றவியல் அம்சங்கள் எதுவும் இல்லாததால் அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஈப்போ போலீஸ் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!