ஈப்போ, ஜூலை-5 – பேராக், பாகான் செராயில் மோட்டார் சைக்கிளிலிலிருந்து விழுந்த ஆடவர், செம்பனை குலை அறுக்கும் கத்திப் பட்டு உயிரிழந்தார்.
புதன்கிழமை மாலை Kampung Matang Gerdu, Parit Sulaiman-னில் நிகழ்ந்த அத்துயரச் சம்பவத்தில், 44 வயது Mat Saari சம்பவ இடத்திலேயே பலியானார்.
செம்பனை குலை அறுக்கும் கத்தியை தோளில் சுமந்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்த Mat Saari, திடீரென கட்டுப்பாட்டையிழந்து கீழே விழுந்த போது, கத்தி அவரின் வயிற்றைப் பதம் பார்த்தது.
கால்வாய் ஓரமாக இரத்த வெள்ளத்தில் கிடந்தவரை பொது மக்களில் இருவர் கண்டு போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த சுகாதாரப் பணியாளர்கள் அவர் உயிரிழந்து விட்டதை உறுதிச் செய்தனர்.
சவப்பரிசோதனைக்காக உடல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட வேளை, அது ஒரு திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.