ஈப்போ, ஜூன் 7 – பேராக், ஈப்போவில், சிகிச்சை பெற வந்த 15 வயது யுவதியை, பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் மருத்துவர் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
இம்மாதம் நான்காம் தேதி, இரவு மணி 9.14 வாக்கில், பாதிக்கப்பட்ட யுவதி செய்த போலீஸ் புகரை தொடர்ந்து, மறுநாள் சம்பந்தப்பட்ட மருத்துவர் கைதுச் செய்யப்பட்டதாக, பேராக் தெங்ஙா மாவட்ட போலீஸ் தலைவர் ஹபீசுல் ஹெல்மி ஹம்சா தெரிவித்தார்.
சங்காட் மெலிந்தாங் மருத்துவமனையின், அவசர பிரிவுக்கு சிகிச்சை பெற சென்ற போது, மருத்துவர் என நம்பப்படும் ஆடவர் ஒருவரால், தாம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, பாதிக்கப்பட்ட யுவதி தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
2017-ஆம் ஆண்டு சிறார் பாலியல் வன்செயல் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டு சம்பந்தப்பட்ட மருத்துவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் ஹபீசுல் உறுதிப்படுத்தினார்.