ஈப்போ, மே 17 – 9.2 கிலோகிராம் ஹெரொயின் போதைப் பொருளை விநியோகம் செய்த ஆடவன் ஒருவனுக்கு எதிராக பேராக், ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
எனினும், 48 வயது நாதன் எனும் அவ்வாடவனிமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
இம்மாதம் 13-ஆம் தேதி, நண்பகல் மணி 1.15 வாக்கில், ஈப்போ, தாமான் பங்காலான் ஜெயாவிலுள்ள, பேரங்காடி ஒன்றில், ஒன்பதாயிரத்து 200 கிராம் எடை கொண்ட போதைப் பொருளை விநியோகித்ததாக, நாதனுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையுடன், 15 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
இவ்வழக்கு விசாரணை ஆகஸ்ட்டு ஐந்தாம் தேதி செவிமடுக்கப்படும்.