
மேரு ராயா இடுகாட்டுக்கு அருகே ஈப்போ நோக்கிச் செல்லும் சாலையில் 2 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் நால்வர் காயமடைந்தனர்.
அதில் ஒரு கார் தீப்பற்றிக் கொண்டது.
நேற்றிரவு 7 மணிக்கு மேல் Honda Civic மற்றும் BMW கார்கள் மோதிக் கொண்டதில், அந்த Honda காரின் முன்பக்க இயந்திரம் தீப்பிடித்து 30 விழுக்காடு சேதமடைந்தது.
அதிலிருந்த மூவரும், BMW காரில் பயணம் செய்த இருவரும் தீயணைப்பு – மீட்புத் துறை வருவதற்குள் பொது மக்களால் காப்பாற்றப்பட்டனர்.
Honda Civic ஓட்டுநருக்கு கால் முறிந்த வேளை, பின்னால் அமர்ந்திருந்த பயணிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.
முன்னிருக்கைப் பயணிக்கு காயமேதும் இல்லை.
BMW காரிலிருந்த இருவருக்கும் நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டது.
காயமுற்ற நால்வரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.