Latestமலேசியா

உடம்புப் பிடி நிலையத்தை மூடும்படி கோலாலம்பூர் மாநகர் மன்றம் உத்தரவு

கோலாலம்பூர், ஏப் 29 – அனுமதியின்றி   செயல்பட்டுவந்த உடம்புப் பிடி நிலையத்திற்கு   மூன்று குற்றப் பதிவுகள் வழங்கப்பட்டதோடு அவற்றை மூடும்படி கோலாலம்பூர் மாநகர் மன்றம் உத்தரவிட்டது.  வெளிநாட்டு  தொழிலாளர்களை  அனுமதியின்றி வேலைக்கு வைத்திருந்தது மற்றும்   அனுமதியின்றி  அங்கு பல்வேறு அறைகளை தடுத்தது போன்ற  குற்றங்களுக்காக   அந்த உடம்புப்பிடி நிலையத்திற்கு குற்றப் பதிவுகள் வழங்கப்பட்டதாக  கோலாலம்பூர் மாநாகர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில்  தெரிவித்தது.  

மேலும் அங்கிருந்த இணைய வசதிக்கான modem, சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் வீடியோ பதிவு கருவியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அமலாக்கத்துறை, லைசென்ஸ் மற்றும் வர்த்தக மேம்பாட்டுத்துறை , கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச இஸ்லாமிய மன்றம் மற்றும் போலீஸ் துறை ஆகியவை கூட்டாக Jalan Loke Yew, Cheras, Jalan Langkawi , Danau Kota ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. விதிமுறைகளையும் மீறி செயல்பட்ட ஆறு பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் உடம்புப்பிடி நிலையங்களுக்கு எதிராக சோதனை நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!