Latestமலேசியா

உடல் பருமன் பிரச்சனை; மலேசியர்களிடையே 10 விழுக்காடு அதிகரிப்பு

புத்ராஜெயா, மே 16 – 2023ஆம் ஆண்டு தேசிய சுகாதாரம் மற்றும் நோயுற்ற ஆய்வு NHMS-இன் கணக்கெடுப்பின்ப்படி, மலேசிய பெரியவர்களில் 54.4 விழுக்காட்டினர், அதிக எடை அல்லது உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வுடன் ஒப்பிடுகையில், தற்போது இது 10 விழுக்காடு அதிகரித்திருக்கிறது.

இந்த ஆய்வின் முடிவை சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கேப்ளி அஹ்மட் வெளியிட்டார்.

13,616 மலேசியர்களை உள்ளடக்கிய இந்த ஆய்வில், 4.9 சதவீதம் பெரியவர்கள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட தினசரி பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்கின்றனர்.

29.9 சதவீதம் பெரியவர்கள் உடல் ரீதியாக செயலற்றவர்களாக இருக்கின்றனர் எனும் திடுக்கிடும் தகவலையும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

ஆக, மலேசியாவில் உடல் பருமன் பிரச்சனை ஆபத்தான நிலையை எட்டியுள்ளதை சுகாதார அமைச்சு இந்த ஆய்வின் வழி எச்சரித்துள்ளது.

இந்த வருடாந்தர NHMSயின் ஆய்வு, மலேசியர்களிடையே நோய்களின் பரவல் மற்றும் அது தொடர்புடைய ஆபத்து காரணிகளை பற்றிய நுண்ணறிவை வழங்கும் ஒரு ஆய்வாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!