உத்தரப் பிரதேசம், ஆகஸ்ட் 26 – இந்தியாவில் அஜாக்கிரதையாகத் தண்டவாளங்களை கடந்து சென்று விபத்துக்களில் சிக்கி தங்கள் இன்னுயிரை இழக்கும் சம்பவங்கள் எங்கேயாவது ஒரு மூலையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இது தொடர்பாக சில நேரங்களில் நெஞ்சை பதற வைக்கும் அளவுக்கு பரபரப்பான காணொளி காட்சிகளும் வெளியாகும்.
இந்த நிலையில், ரயில்வே தண்டவாளத்தில் அசந்து தூங்கும் முதியவர் ஒருவரை, ரயில் ஓட்டுநர் loco pilot, ரயிலிலிருந்து இறங்கி வந்து எழுப்பி விட்டு செல்லும் காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது.
வியக்க வைக்கும் படியாக நடந்துள்ள இந்த சம்பவம் இந்தியா, உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
அந்த காணொளியில், முதியவர் ஒருவர் குடை பிடித்தபடி தூங்கிக் கொண்டிருந்த போது, ஒரு ரயில் சரியாக அவருக்கு அருகில் வந்து நிற்பதை காணமுடிகிறது.
பின், ரயில் ஓட்டுநர் loco pilot, ரயிலில் இருந்து இறங்கி வந்து, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவரை எழுப்பி அவ்விடத்திலிருந்து அகற்றினார்.
ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்திருக்கும் இந்த வைரல் வீடியோ, சமூக வலைத்தளவாசிகளிடமிருந்து பலவிதமான எதிர்வினைகளைக் குவித்து வருகிறது.
ஒரு பயனர், “என்ன ஒரு புத்திசாலித்தனம்” என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார். “ஒரே குழப்பமா இருக்கு. அவர் ஏன் குடை பிடித்துப் படுத்திருக்கிறார்?” என்று மற்றொரு பயனர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இன்னொரு பயனரோ, “எமதர்ம ராஜா இந்த லோகோ பைலட்டை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்” என்று வேடிக்கையாகவும் பதிவிட்டுள்ளார்.