தஞ்சோங் மாலிம், மே 23 – உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகப் பரதநாட்டிய பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மீண்டும் மலர்கிறது முத்தமிழ் விழா பாகம் 2.
தேசிய அளவில் வருகின்ற 25 மே நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் அரசாங்கம் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களும், தமிழ்ப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களும் ஒன்றிணைந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும், கவிதை ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை எழுதும் போட்டி நடைபெறும்.
அதே சமயத்தில், உயர்க்கல்வி மாணவர்கள் இந்திய சமுதாயத்திடையே ஏற்படும் இன்னல்களை குறித்து மூன்று பிரிவுகளாகப் பிரித்து மாநாடு ஒன்றினை நடத்தவிருக்கின்றனர்.
மூவர் ஒரு குழுவாக முன்மொழியும் கருத்துகளை, பரிந்துரை ஏடாக அச்சிட்டு அன்று, வெளியீடு காணவுள்ளது.
அச்சிடப்படும் அந்தப் பரிந்துரை ஏடு, அந்நாளில் உயர் கல்வி அமைச்சிடமும் ஒப்படைக்கப்படும் என அதன் தலைவர் உதயவேலன் லிங்கம் தெரிவித்தார்.
ஆக, முற்றிலும் பயனுள்ள வகையில் மிகவும் நேர்த்தியாக ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில், பொது மக்களும் மாணவர்களும் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் சார்பாக அதன் தலைவர் கேட்டுக் கொண்டார்.