தஞ்சோங் மாலிம், மே 7 – கடந்த 4ஆம் திகதி சனிக்கிழமை உப்சி பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் புத்தாக்க மற்றும் படைப்பாற்றல் போட்டி நடைபெற்றது.
அப்போட்டியில் பல்கலைக்கழகம், கல்லூரி, இடைநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதில், ஆரம்பப் பள்ளியான சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்களான நரேஸ், நவினாஸ்ரீ, நளன் மற்றும் திவ்யன்ராவ் ஆகியோர் பொதுப் பிரிவில், வெண்கலம் வென்றனர்.