Latestமலேசியா

உயர்கல்வி கட்டணத்திற்கு 100% உதவித்தொகை பெற விரும்புகிறீர்களா?; வருகின்ற ஜூலை 20 மற்றும் 21 திகதிகளில் நடைபெறவுள்ள “AIMST Scholarship Dayவில்” கலந்து கொள்ளுங்கள்!

கோலாலம்பூர், ஜூலை 16 – எஸ்.பி.எம் முடித்த மாணவர்களே! மேற்கல்வியைத் தொடர 100% விழுக்காடு வரை உபகாரச் சம்பளம் வேண்டுமா?

இதுவரை பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கி இந்தியர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கியுள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், இதோ உங்களுக்காக கூடுதலான Scholarship-வை அள்ளி வழங்க காத்திருக்கிறது.

அதற்காக பிரத்தேயகமாக பேராக், சிலாங்கூர் மற்றும் கெடாவில் Scholarship Day-வை ஏற்பாடு செய்திருக்கிறது.

ஜூலை 20ஆம் திகதி சனிக்கிழமை, Ipoh UTC-சியிலும், 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை Manjung, Apple Suite Hotel-லிலும் இந்த Scholarship Day பேராக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அதுபோலவே, தெற்கு மாநிலங்களான மலாக்கா, நெகிரி செம்பிலான், ஜோகூர் மாணவர்கள் கலந்து கொள்ளும் வகையிலும் கோலாலம்பூரில் அமைந்துள்ள MIED அலுவலத்தில் இந்த Scholarship Day நடைபெறும்.

கெடாவில் அமைந்துள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வளாகத்திலும் AIMST Edufest 5.0 Scholarship தினம் வடக்கு பகுதி மாநிலங்களான பெர்லிஸ், பினாங்கு, ஆகிய மாணவர்களுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்படுத்தப்பட்டுள்ள உபகாரச் சம்பளத்திற்கான இட ஒதுக்கீட்டிய நமது மாணவர்கள், முறையாக பயன்படுத்திக் கொள்வதற்காக பிரத்தியேகமாக இந்த Scholarship Day-வை ஏய்ம்ஸ்ட் நடத்துகிறது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள இந்த Scholarship Day-வில், நீங்கள் தேர்வு செய்யும் துறைக்கான கல்விக் கட்டணம், கல்வி கடனுதவி, உபகாரச் சம்பளம் உள்ளிட்ட விவரங்களை நீங்கள் கேட்டறியலாம்.

தகுதி இருக்கும் மாணவர்களுக்கு 100% விழுக்காடு வரை Scholarship கிடைக்கப்பெறும் வழிகாட்டுதலும் வருகின்ற 20ஆம், 21ஆம் திகதிகளில் வழங்கப்படும்.

இன்னும் எதற்குத் தாமதம்! Foundation, Diploma, Degree, Masters என அனைத்து நிலை கல்வி வாய்ப்புகளை உங்களுக்கு வழங்கக் காத்திருக்கும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை நீங்களும் நாடலாமே!

இது தொடர்பான மேல் விவரங்களுக்கு, திரையில் காணும் எண்களை அழையுங்கள்.

குறைந்த கட்டணம், தரமான கல்வி என்றாலே, அது என்றென்றும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம்!

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!