Latestமலேசியா

உரிமை கட்சியின் பதிவு நிராகரிப்பு ; உள்துறை அமைச்சரிடம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது – சத்திஸ்

கோலாலம்பூர், ஜூலை 22 – இம்மாதம் தொடக்கத்தில், உரிமை கட்சியின் பதிவு விண்ணப்பத்தை நிராகரித்த சங்கங்களின் பதிவுத் துறையின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கோரி, உள்துறை அமைச்சரிடம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, அந்த மேல்முறையீடு ஒப்படைக்கப்பட்டதை, உரிமை கட்சியின் அமைப்பு செயலாளர் சத்தீஸ் முனியாண்டி தெரிவித்தார்.

பதிவு நிராகரிக்கப்பட்ட எந்தவொரு அமைப்பும், 30 நாட்களுக்குள், உள்துறை அமைச்சிடம் மேல் முறையீடு செய்யலாம்.

அதன் அடிப்படையிலேயே, அவ்விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முன், உள்துறை அமைச்சரிடம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக, சத்தீஸ் தெளிவுப்படுத்தினார்.

கட்சிகளின் பதிவை மறுப்பது, மக்களாட்சி உரிமை மீதான தாக்குதல் என, எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அன்வார் கூறியுள்ளார்.

அதனால், கடந்த காலத்தில், நாட்டின் எதிர்கட்சியாக இருந்த சமயத்தில், தாங்கள் எதிர்த்து போராடிய அல்லது விமர்சித்த முறைகளை கொண்டு, உரிமை கட்சியின் பதிவை, டத்தோ ஸ்ரீ அன்வார் தலைமையிலான இன்றைய மடானி அரசாங்கம் நிராகரிக்க கூடாது என சத்தீஸ் வலியுறுத்தியுள்ளார்.

கட்சிகளின் பதிவு என்பது, நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் பத்தாவது பிரிவு, உட்பிரிவு ஒன்று (c)-யின் கீழ், மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையாகும்.

எனவே, மடானி அரசாங்கம் குறிப்பாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்தியோன், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மதித்து, உரிமை கட்சியின் பதிவை அங்கீகரிக்க வேண்டுமென, தமது தரப்பு கேட்டுக் கொள்வதாக சஸ்தீஸ் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!