ரானாவ், ஏப்ரல் 20 – சபா, ரானாவில் சொந்த உறவினரையே கொலைச் செய்து, எரியூட்டிய ஆடவன் கைதாகியுள்ளான்.
கம்போங் கிப்பாலியுவில் கொல்லப்பட்டவரின் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் காட்டுப் பகுதியில் நேற்று பிற்பகலில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அப்படுகொலை வெளிச்சத்துக்கு வந்தது.
கொல்லப்பட்டு எரியூட்டப்பட்டவர், ஏப்ரல் 16-ஆம் தேதி காணாமல் போன 68 வயது ஆடவர் என தெரிகிறது.
வீட்டுக்குப் பின்னால் எரிந்துப் போன மனித எலும்புகள் இருப்பதைக் கண்டு சந்தேகத்தில் உறவுக்காரப் பையன் தகவல் கொடுக்க, போலீஸ் சம்பவ இடம் விரைந்தது.
அங்குக் கைப்பற்றப்பட்ட எலும்புகள் மரபணு பரிசோதனைக்காக கோத்தா கினாபாலு இராசயணத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சந்தேக நபரான 50 வயது ஆடவர் சம்பவ இடத்திற்கு சற்று தொலைவில் வைத்து கைதுச் செய்யப்பட்டார்.
கொலைக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸ் கூறியது.