தெலுக் இந்தான், மே 5 – உலுசிலாங்கூரில் 5 தோட்டங்களை உட்படுத்திய 245 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கான பல ஆண்டுகால வீடமைப்பு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் Nga Kor Ming உறுதியளித்துள்ளார்.
அடுத்த வாரம் இதற்கான நல்ல செய்தியை அரசாங்கம் அறிவிக்கும் என்று அவர் கூறினார். இதற்கு முன் Batang Berujuntai என்று விளங்கிய Bestari Jaya வின் 5 தோட்டங்களைச் சேர்ந்த குடும்பத்தினர் வீடுகள் எதுவும் வழங்கப்படாமலேயே அந்த தோட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
1998ஆம் ஆண்டு முதல் இந்த பிரச்சனை நீடித்து வருகிறது. 26ஆண்டுகளாகியும் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்படவில்லையென Nga தெரிவித்தார். 245 குடும்பங்களை பாதித்த இந்த நீண்டகால வீடமைப்பு பிரச்னைக்கு அடுத்த வாரம் நல்ல செய்தியை நாங்கள் கொண்டு வருவோம் என அவர் கூறினார். Mary தோட்டம், Nigel Gardner, Sungai Tinggi, Minyak மற்றும் Bukit Tagar ஆகியவை அந்த ஐந்து தோட்டங்களாகும்.