
ஜோகூர் பாரு, டிசம்பர்-9, ஜோகூர், உலு திராம், தாமான் பிஸ்தாரி இண்டாவில் அச்சக உரிமையாளர் ஒருவர் நேற்று நண்பகலில் தனது வீட்டில் இறந்துகிடக்கக் கண்டெடுக்கப்பட்டார்.
2 நாட்களாக தொடர்பில் வராததால் சந்தேகத்தில் வீட்டுக்கே போய் தேடிய போது, அவரின் இந்தோனீசியக் காதலியால்
40 வயது அந்நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இறந்தவர், அந்தக் கடை வீட்டில் தனியாக வசித்து வந்ததாக தென் ஜோகூர் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் ரவூப் செலாமாட் (Raub Selamat) கூறினார்.
தொடக்கக் கட்ட விசாரணையில், அம்மரணத்தில் குற்ற அம்சங்கள் எதுவும் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து தற்போதைக்கு அது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.