Latestமலேசியா

உலு திராமில் வீட்டின் வேலி மீது வைத்திருந்த பொட்டலத்தை நைசாக திருடிய “Toyota Vellfire” காரில் வந்த ஆடம்பர திருடன்

ஷா ஆலம், ஜூலை 1 – டொயோட்டா வெல்ஃபயர் (Toyota Vellfire) பல்நோக்கு MPV ரக வாகனத்திலிருந்து, ஆடவர் ஒருவர் உலு திராம் (Ulu Tiram), தாமன் தேசா செமர்லாங்கில் (Taman Desa Cemerlang) அமைந்துள்ள, ஒரு வீட்டின் வேலியில் இருந்த பொட்டலத்தை திருடும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது. 

நேற்று முகநூலில் வைரலான CCTV கேமரா பதிவுகளின் மூலம், கருப்பு நிற MPV வாகனம் மெதுவாக நகர்ந்து வீட்டின் முன் நிற்கும் நிலையில், வெள்ளைச் சட்டையும் முகமூடியும் அணிந்த ஆடவர் ஒருவர், அந்த பொட்டலத்தை அவசரமாக எடுத்து மீண்டும் வாகனத்திற்குள் நுழைவதைக் காணமுடிகின்றது. 

இது குறித்து ஓர் அறிக்கையின் வழி, செரி ஆலம் (Seri Alam) மாவட்ட காவல்துறை தலைவர் சுப்ரிடெண்டன் (Superintendan) முகமட் சொஹைமி இஷாக் (Mohd Sohaimi Ishak), நேற்று பரவிய அந்த 41 வினாடி காணொளியில் பதிவான சம்பவத்தை குறித்து 59 வயது ஆடவர் ஒருவர் புகார் வழங்கியத்தைத் தெரிவித்திருக்கிறார். 

குற்றவியல் சட்டம் 379-இன் கீழ் இந்த சம்பவம் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், திருடிய அந்த ஆடவருக்கு, அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!