Latestமலேசியா

உலு திராம் போலீஸ் நிலையத் தாக்குதல்; சந்தேக நபரது 5 குடும்ப உறுப்பினர்கள் SOSMA சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பு

கோலாலம்பூர், மே-24 – ஜொகூர், உலு திராமில் போலீஸ் நிலையத்தில் தாக்குதலை நடத்திய நபரின் குடும்ப உறுப்பினர்கள் ஐவரும், பாதுகாப்புக் குற்றங்களுக்கான சிறப்புச் சட்டம் SOSMA-வின் கீழ் மீண்டும் கைதாகியுள்ளனர்.

தேசியப் போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razaruddin Husain அதனை உறுதிபடுத்தினார்.

இதற்கு முன் வழக்கமான தடுப்புக் காவலில் வைத்து அவர்கள் விசாரிக்கப்பட்ட நிலையில், SOSMA சட்டத்தின் கீழ் இன்று தொடங்கி 28 நாட்களுக்கு அவர்கள் விசாரணைக் கைதிகளாக தடுத்து வைக்கப்படுவதாக IGP சொன்னார்.

இதுநாள் வரையிலான விசாரணையில், அக்குடும்பமே அக்கம் பக்கத்தாருடன் அண்டி பழகாமல் ஒரு சிறிய வட்டத்துக்குளேயே வாழ்ந்து வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதோடு சந்தேக நபரின் தந்தை, Jemaah Islamiyah கும்பலைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது என Tan Sri Razaruddin சொன்னார்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நாட்டையே உலுக்கிய அத்தாக்குதல் தொடர்பில் இதுவரை 47 பேரது வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அத்தாக்குதலில் இரு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்ட வேளை; மற்றொருவர் காயமடைந்தார்.
தாக்குதல் நடத்திய இளைஞனும் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!