Latestமலேசியா

உலு திராம் போலீஸ் நிலையம் தாக்கப்பட்ட சம்பவம்; கடும் நடவடிக்கை தேவை பிரதமர் அன்வார் வலியுறுத்து

கோலாலம்பூர், மே 17 – ஜோகூரில்  Ulu Tiram    போலீஸ் நிலையம் தாக்கப்பட்ட சம்பவத்தில்  பின்னணியாக இருந்தவர்களை தேடி  சட்டத்தின்  முன் நிறுத்தும்படி  பிரதமர் டத்தோஸ்ரீ   அன்வார்  இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.  அந்த சம்பவம் கவலை  அளிப்பதோடு நாட்டில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியிருப்பதாக   அவர் கூறினார்.  

அந்த போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில்  இரண்டு போலீஸ் Konstabelகளான  Ahmad Azza Fahmi Azhar  மற்றும்  Muhamad Syafiq Ahmad Said கொல்லப்பட்டதோடு  மேலும் ஒருவர் காயம் அடைந்திருப்பது கவலையை ஏற்படுத்தியிருப்பதாக அவர்  கூறினார்.  

மேலும் காயம் அடைந்த  Koperal  Mohd Hasif Roslan   விரைவில் குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக   X தளத்தில் அன்வார் பதிவிட்டுள்ளார். அதோடு அந்த  தாக்குதலில் உயிரிழந்த இரண்டு  போலீஸ்காரர்களின் குடும்பத்தினருக்கு  தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் அன்வார் தெரிவித்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!