கோலாலம்பூர், ஏப்ரல் 24 – உள்நாட்டு வெள்ளை அரிசி சிறப்புத் திட்டத்தின் கீழ், திங்கட்கிழமை வரை 519.36 மெட்ரிக் டன் அல்லது 51,936 உள்ளூர் வெள்ளை அரிசிப் பைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
சந்தைகளில் அரிசி கையிருப்புப் பற்றாக்குறைப் பிரச்னைக்கு குறுகியக் கால தீர்வாக அது அமைவதாக, விவசாயிகள் சங்க வாரியம் LPP கூறியது.
நாடளாவிய நிலையில் மாநில விவசாயச் சங்கங்கள் வழியாக, Agrobazar விவசாயச் சந்தைகள் உள்ளிட்ட விநியோகத் தளங்கள் வாயிலாக அவை விநியோகிக்கப்பட்டன.
கடந்தாண்டு மொத்தமாக 2,101 மெட்ரிக் டன் அல்லது 2 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளை அரிசிப் பைகள் விநியோகிக்கப்பட்டதாக அவ்வறிக்கை மேலும் கூறியது.
இதனிடையே, நேற்று முன்தினம் வரை மொத்தம் 34 மடானி விவசாய விற்பனைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாண்டு அத்தகைய 78 விற்பனைத் திட்டங்களை மேற்கொள்ளவும் அது இலக்கு வைத்துள்ளது.