
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-19 – ஆகஸ்ட் 13–14 ஆகிய தேதிகளில், கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஆசியான் TVET மாநாடு 1,500க்கும் மேற்பட்ட கொள்கையமைப்பாளர்கள், தொழில் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பங்குதாரர்களை ஒன்று திரட்டியது.
மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp மற்றும் திறன் மேம்பாட்டு நிதிக் கழகமான PTPK இணைந்து நடத்திய இந்த மாநாடு, “உள்ளடக்கிய TVET அமைப்பு மூலம் டிஜிட்டல் மற்றும் பசுமை உருமாற்றத்தை இயக்குதல்” என்ற கரும்பொருளில் நடைபெற்றது.
PTPK தலைமைச் செயல் அதிகாரி Mohd Fathullah Mustafa, டிஜிட்டல் மற்றும் பசுமைத் திறன்களை விரிவுபடுத்த TVET அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
HRD Corp தலைமைச் செயல் அதிகாரி Dr Syed Alwi Mohamed Sultan, இளைஞர் வேலைவாய்ப்பு, தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் சமூக அரவணைப்புக்கு TVET மிக முக்கியமானது எனக் கூறி, பாடத்திட்ட மேம்பாடு மற்றும் தொழில் ஒத்துழைப்புகளை வலியுறுத்தினார்.
ASEAN Future-Makers Challenge 2025 போட்டியில், ADTEC Jerantut முதலிடம், Institut Proton ADTEC Melaka இரண்டாம் இடம், Sekolah Menengah Antarabangsa UUM Melaka மூன்றாம் இடம் பெற்றன. அப்போட்டியில் 57 கண்காட்சியாளர்கள் புத்தாக்க மற்றும் பயிற்சி தீர்வுகளை வழங்கினர். தொடக்க விழாவை துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ Ahmad Zahid Hamidi திறந்து வைத்தார்.
மனிதவள அமைச்சர் Stevan Sim-மும் கலந்து கொண்ட இந்த மாநாடு, AYOS 2025-ன் ஒரு முக்கிய தளமாக, மலேசியாவின் ஆசியான் தலைமைத்துவத்தையும், மனித மூலதன மேம்பாட்டிற்கான கடப்பாட்டையும் வலியுறுத்தியது.