Latestமலேசியா

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடு ; எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றம் வரை 200 கிலோமீட்டம் ஓடுகிறார் சையிட் சாடிக்

ஷா ஆலாம், ஜூன் 27 – எதிர்க்கட்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு மறுக்கப்பட்டதை தொடர்ந்து, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், “லங்கா மூவார்” (Langkah Muar) முயற்சியை தொடங்கியுள்ளார், அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் (Syed Saddiq Syed Abdul Rahman).

அதன் வாயிலாக, மூவாரில் இருந்து நாடாளுமன்றம் வரையில், 200 கிலோமீட்டர் தூரம் வரை ஓடி, தமது தொகுதியிலுள்ள, பொது சேவை மையத்திற்கு நிதி திரட்டப்போவதாக சையிட் சாடிக் கூறியுள்ளார்.

ஒரு வடத்திற்கும் மேலாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு கிடைக்கவில்லை. இருமுறை துணைப்பிரதமருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு விட்டது. மூன்று முறை கடிதம் அனுப்பப்பட்டு விட்டது. பதில் ஏதும் இல்லை. அதனால் முயற்சியை கைவிட முடியாது. புகார் கூறுவதை காட்டிலும் செயல்படுவது சிறந்ததுஎன சையிட் சாடிக், தமது X சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள காணொளி வாயிலாக கூறியுள்ளார்.

இதற்கு முன், முடியை தியாகம் செய்தும், சமையல் வகுப்புகளை நடத்தியும், விளம்பர நடவடிக்கையில் பங்கேற்றும் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட சையிட் சாடிக், இம்முறை தமது காலை பயன்படுத்தி எதிர்ப்பு தெரிவிக்கும் அதே சமயம், நிதி திரட்டப்போவதாகவும் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடுகளை பகிர்ந்தளிப்பது தொடர்பில், அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை தயாரித்து வருவதாக, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ படில்லா யூசோப் (Datuk Seri Fadillah Yusof) கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!