Latestமலேசியா

எதிர்பார்த்து காத்திருந்த ‘Tourist Family’ திரைப்படம் வெளியீடு – காணத் தவறாதீர்கள்!

கோலாலம்பூர், மே-2, பரவலாக எதிர்பார்க்கப்பட்ட Tourist Family படம் உலகம் முழுவதும் நேற்று திரைக்கு வந்தது.

சசிகுமார், சிம்ரன், யோகி பாபு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை அபிஷந்த் ஜீவிந்த் இயக்கி, Million Dollar Studios மற்றும் MRP Entertainment இணைந்துத் தயாரித்துள்ளனர்.

கோவிட்-19 பெருந்தொற்றினால் இலங்கையின் பொருளாதாரம் சரிந்த பிறகு, அடைக்கலம் தேடுவதற்கும் சிறந்த எதிர்காலத்தை அடைவதற்கும் ஒரு தமிழ் குடும்பம் எடுக்கும் கடினமான முடிவை இந்தப் படம் சித்தரிக்கிறது.

மலேசியாவில் இப்படத்தின் திரையீட்டை குறிக்கும் விதமாக ஏப்ரல் 30-ஆம் தேதி சிறப்பு முன்னோட்டக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

LFS PJ State திரையரங்கில் இரவு 9 மணிக்குத் தொடங்கிய இந்த பிரீமியர் காட்சியில் பிரமுகர்கள், உள்ளுர் கலையுலகினர், சமூக ஊடக பிரபலங்கள் என சுமார் 100 பேர் கலந்துகொண்டனர்.

Tourist Family படத்தின் மலேசிய விநியோகஸ்தர்களான Five-Star நிறுவனத்தின் தலைமை நிர்வாகி Dr சாய் சுதன் கிருஷ்ணன் மற்றும் Heartwork Pictures நிறுவனத்தின் பிரதிநிதி குமரன் ரெங்கசாமி, வணக்கம் மலேசியாவிடம் இப்படம் குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன், படத்தைப் பெரிதும் பாராட்டினார்.

மேலும் சில முக்கியப் பிரமுகர்களும் படம் மீதான தங்களின் அபிப்பிராயத்தை வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்துகொண்டார்கள்.

வித்தியாசமாகக் கதைக் களத்துடன், மிகச் சிறந்த திரைக்கதையுடன் வெளிவந்துள்ள இந்த Tourist Family படத்தை குடும்பத்தோடு சென்று காணுங்கள்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!