
பெட்டாலிங் ஜெயா, அக் 16 –
பள்ளி மாணவனால் குத்தில் கொலை செய்யப்பட்ட தனது மகள் 200 முறை குத்தப்பட்டதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார் அண்மையில் பண்டார் உத்தாமா இடைநிலைப்பள்ளியில் கொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார்.
மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனையின் சவப்பரிசோதனை அறிக்கையில், தனது மகளின் உடல், கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதி போன்ற பகுதிகளில் மொத்தம் 200 குத்தப்பட்ட சிறு மற்றும் ஆளமான காயங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே, போலிஸ் விசாரணையில், கொலை செய்த மாணவன், அம்மாணவி இருந்த பூட்டப்பட்ட கழிவறையில் மேலிருந்து கீழே குதித்து அவரை தாக்கியதாக தெரிய வந்துள்ளது. உதவி கேட்டு அலரிய அம்மாணவி, கதவை உடைத்து ஆசிரியர்கள் அவரை காப்பாற்றும் முன் இறந்து விட்டதாகவும் அறியப்படுகிறது.
இந்நிலையில், இறந்த தனது மகளுக்கு கொலை செய்த மாணவனை நன்கு தெரியும் என்றும் அவர் கற்பழிக்கப்பட்டார் என தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார் அந்த தாயார்.