Latestஉலகம்மலேசியா

எம்.எச் 17 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு நாள் ஆம்ஸ்டெர்டெமில் நடைபெறும்

கோலாலம்பூர், ஜூலை 12 – எம் .எச் 17 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட 10 ஆம் ஆண்டு நினைவு   நாள்,  நெதர்லாந்தின் ஆம்ஸ்டெர்டெம்  Schiphol (Amsterdam Schiphol) விமான நிலையத்திற்கு அருகேயுள்ள பூங்காவில்   நடைபெறவிருக்கிறது.   

ஜூலை  17 ஆம் நாள் நடைபெறும் இந்த நிகழ்வில் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில்  பலியானவர்களின் உறவினர்கள் உட்பட  உலகம் முழுவதிலும்  சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டோர்   கலந்துகொள்வார்கள் என  கோலாலம்பூரிலுள்ள நெதர்லாந்து தூதரகம் வெளியிட்ட அறிக்கையில்  தெரிவித்தது. 

2014ஆம் ஆண்டு  ஜூலை  17 ஆம் தேதி  கிழக்கு உக்ரேய்னுக்கு உயரே பறந்துகொண்டிருந்த எம்.எச் விமானத்தை  BUK  ஏவுகனை தாக்கியதில்  அதில் இருந்த 80 சிறார்கள்  உட்பட  அனைத்து 298 பயணிகளும்  உயிரிழந்தனர்.   

198 நெதர்லாந்து பிரஜைகள்,   43 மலேசியர்கள்,  38 ஆஸ்திரேலியர்கள்,  மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த 10  பிரஜைகள் உட்பட 17 நாடுகளைச் சேர்ந்த  பிரஜைகள் அவ்விமானத்தில் இருந்தனர்.     

ஒரு பாவமும் அறியாத    298 உயிர்கள் பலியான  இந்த சம்பவத்தில் தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்த பலர்   இன்னமும்  மறக்க முடியாத சோகத்தை   அனுபவித்து வருகின்றனர். அந்த சம்பவத்தில்  உயிரிழந்தவர்களுக்கு நீதி  கிடைப்பதற்கான எங்களது போராட்டம் தொடரும் என  நெதர்லாந்து தூதரகம் வெளியிட்ட அறிக்கையில்  தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!