Latestஉலகம்

‘எவரெஸ்ட் மனிதர்’ ; 29-வது முறையாக எவரெஸ்ட் மலையேறி சொந்த சாதனையை முறியடித்தார் நேப்பாள ஷெர்பா

காத்மாண்டு, மே 13 – உலகின் மிக உயரமான மலையான, எவரெஸ்ட் சிகரத்தை 29-வது முறையாக ஏறி, நேப்பாள வழிகாட்டி ஒருவர், தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.

1953-ஆம் ஆண்டு, முதல் முறையாக எண்ணாயிரத்து 849 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய, நியூசிலாந்தின் சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் ஷெர்பா அல்லது மலையேறியான டென்சிங் நோர்கே பயன்படுத்திய பாதை வழியாக, காமி ரீட்டா ஷெர்பா அந்த சாதனையை பதிவுச் செய்துள்ளார்.

எவரெஸ்ட் மனிதர் என அழைக்கப்படும் ரீட்டா, 1994-ஆம் ஆண்டு முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்த வேளை ; கடந்தாண்டு மே மாதம், ஒரே வாரத்தில் இரு குறை எவரெஸ்ட் உச்சியை தொட்டு சாதனை படைத்தார்.

இவ்வேளையில், பிரிட்டனை சேர்ந்த 50 வயது கெண்டன் கூல் என்பவரும், உலகின் அந்த உயரமான சிகரத்தின் உச்சியில், 18-வது முறையாக கால் பதித்து, புதிய சொந்த சாதனையை பதிவுச் செய்துள்ளதாக, நேப்பாள சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

எனினும், அவர்கள் இருவரும் தனித்தனி பயணங்கள் வாயிலாக அந்த சாதனைகளை படைத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!