Latestஇந்தியாஉலகம்

ஏர் இந்தியா விமானி போதைப்பொருள் பரிசோதனையில் தோல்வி

புது டெல்லி, ஆகஸ்ட்-12-அண்மையில், நடுவானில் சட்டென கீழே இறங்கி கடுமையாகக் குலுங்கிய ஏர் இந்தியா விமானத்தின் முதன்மை விமானி கஞ்சா பயன்படுத்தியிருப்பது பரிசோதனையில் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

​ஆகஸ்ட் 4-ஆம் தேதி தாய்லாந்து ஃபுக்கெட்டிலிருந்து புது டெல்லி நோக்கிச் சென்ற அந்த விமானம், திடீரென 300 அடி கீழே இறங்கியதில் 17 பயணிகள் காயமடைந்தனர்.

​சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில், முதன்மை விமானி கஞ்சா பயன்படுத்தியிருந்தது உறுதியானது.

​இதையடுத்து இரு விமானிகளும் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

​தொழில்நுட்ப உதவி வழங்கிட AirBus நிறுவனத்தின் நிபுணர் குழு புது டெல்லிக்கு விரைந்துள்ளது.

​இச்சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா தலைமைச் செயல் அதிகாரியிடம் பொது விமானப் போக்குவரத்து அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!