Latestமலேசியா

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கோலாலம்பூர், ஆகஸ்ட்-12-சிலாங்கூரில் உள்ள சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது.

​அடுத்த பொதுத் தேர்தல் வரை இந்தத் தொகுதி காலியாகவே இருக்கும் என தேர்தல் ஆணையம் SPR உறுதிப்படுத்தியுள்ளது.

​அங்கு 3 முறை பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வோங் சென் (Wong Chen) திங்கட்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

​தொகுதி காலியானது குறித்து மக்களவை சபாநாயகர் தான் ஸ்ரீ ஜொஹாரி அப்துல், SPR-ருக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், ​கூட்டரசு அரசியலமைப்பின் கீழ், இந்த இடைவெளியை நிரப்புவதற்கான தேவை எதுவும் தற்போது இல்லை என SPR டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹருண் தெரிவித்தார்.

நாட்டின் மிகப் பெரிய நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான சுபாங்கில், ​கடந்த பொதுத் தேர்தலில் சுமார் 115,000 வாக்குகள் வித்தியாசத்தில் Wong Chen வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!