Latestமலேசியா

ஏ.ஆர். ரகுமான் இசைநிகழ்ச்சி: புக்கிட் ஜாலில் LRT நிலையத்தின் சேவை நேரம் அதிகாலை 1 மணி வரை நீட்டிப்பு

புக்கிட் ஜாலில், ஜூலை 27 – கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் இன்றிரவு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் மாபெரும் இசைநிகழ்ச்சி நடைபெறவிருப்பதையொட்டி, புக்கிட் ஜாலில் LRT நிலையத்தின் சேவை நாளை அதிகாலை 1 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

அந்த பொது போக்குவரத்து முறையைப் பயன்படுத்தி கலைநிகழ்ச்சியைக் காண வருவோரின் வசதிக்காக, சேவை நேரம் நீட்டிக்கப்படுவதாகப் பிரசரண (Prasarana) நிறுவனம் தெரிவித்தது.

அவ்வழித்தடத்திலுள்ள மற்ற நிலையங்களின் சேவை நேரமும் நீட்டிக்கப்படுகிறது.

இவ்வேளையில் நெரிசலில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க, பயணிகள் Touch n Go (TnG) அட்டையில் போதியப் பணமிருப்பதை உறுதிச் செய்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

AR Rahman Live in Kuala Lumpur இசைநிகழ்ச்சி இன்றிரவு 8 மணிக்குத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மனோ, ஸ்ரீனிவாஸ், ஷ்வேதா மோகன், ஷக்தி ஸ்ரீ கோபாலன், பிளேஸ் உள்ளிட்ட ஏராளமான பாடகர்களும் அதில் பங்கேற்று இரசிகர்களை மகிழ்விக்கவுள்ளனர்.

கடந்தாண்டு இதே புக்கிட் ஜாலில் நடைபெற்ற AR Rahman – Secret of Success – Live in Malaysia 2023 பிரமாண்ட இசைநிகழ்ச்சியில் 60,000-கும் மேற்பட்ட இரசிகர்கள் பங்கேற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!