Latestஉலகம்

ஐக்கிய அரபு சிற்றரசில் ஹோட்டல் விலை சரிவு; மேற்காசிய பதற்றமே காரணம்

அபு தாபி, மார்ச்-24-மேற்காசியாவில் நிலவும் பதற்றத்தால், UAE எனப்படும் ஐக்கிய அரபு சிற்றரசில் ஹோட்டல் விலைகள் கடுமையாக சரிந்துள்ளன.

முக்கிய வர்த்தக நகரான துபாய் மற்றும் தலைநகர் அபுதாபியில், 4 நட்சத்திர ஹோட்டல்களின் விலை ஏப்ரல் மாதத்தில் 75 விழுக்காடு வரை குறைந்து, ஒரு இரவுக்கு 50 முதல் 60 அமெரிக்க டாலர் மட்டுமே பதிவாகியுள்ளது.

இதுவே 5 நட்சத்திர ஹோட்டல்களின் நிலைமை இன்னும் மோசம்… அங்கு 66 விழுக்காடு வரை குறைந்து, 100 முதல் 150 டாலர் விலையில் அறைகள் வழங்கப்படுகின்றன.

அபுதாபியில், Mercure மற்றும் Ramada Downtown போன்ற பிரபல ஹோட்டல்கள் 54 டாலர் விலையில் அறைகளை வழங்குகின்றன.

Ritz‑Carlton, Shangri‑La போன்ற பிரபல ஹோட்டல்களும் விலையை பாதியாகக் குறைத்துள்ளன.

துபாயிலும் Stella Di Mare, Hyatt Place போன்ற ஹோட்டல்கள் குறைந்த விலையில் அறைகள் வழங்குகின்றன.

இந்த விலை சரிவானது, வளைகுடா வட்டாரத்தில் அதிகரித்துள்ள அரசியல் பதற்றம் காரணமாக சுற்றுலா தேவைகள் குறைந்ததன் விளைவாக ஏற்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!