Latestமலேசியா

ஐஸ்வர்யா ராய் உடையை தைப்பூசத்துடன் தொடர்புபடுத்தி பேசிய செப் வான்- போலீஸ் விசாரணை

கோலாலாம்பூர், மே 28 – நடிகை ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த உடையை சமூக வலைத்தளத்தில் தொடர்புப்படுத்தி பேசிய பிரபல சமையல் நிபுணர் Chef Wan னிடம் தற்போது புக்கிட் அமான் முன்னணி குற்றவியல் விசாரணைத்துறை விசாரணை மேற்கொண்டு வருவதை போலீஸ் உறுதிப்படுத்தியது. பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த அழகான கவுன் உடையுடன் சிவப்பு கம்பளத்தில் தோன்றியது பத்துமலை தைப்பூச கொண்டாட்டத்தில் காவடி ஏந்தியிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்ததாக Datuk Redzuawan Ismail என்ற Chef wan சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் தங்களுக்கு ஒரு புகார் கிடைத்திருப்பதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Ahmad Sukarno Mohamad Zahari தெரிவித்தார். எனினும் 3 R எனப்படும் சமயம், இனம் மற்றும் ஆட்சியாளர் அம்சத்தை உள்ளடக்கியதாக இருப்பதால் புக்கிட் அமான் முன்னணி குற்றவியல் விசாரணைத் துறையிடம் இந்த விவகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் மூன்று ஆர் தொடர்பான அம்சங்கள் குறித்து பதிவிட வேண்டாம் என Ahmad Sukarno பொதுமக்களை கேட்டுக்கொண்டார். பல இன மக்களைக் கொண்ட மலேசிய நாட்டில் பொது அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிரட்டலை ஏற்படுத்தும் விவகாரங்கள் குறித்து பதிவிடுவதை தவிர்க்கும்படி அவர் வலியுறுத்தினார். Chef Wan தெரிவித்த கருத்து இனத்துவேசத்தை கொண்டதாகவும் பிரபலமான அவரது அடையாளத்தை இந்த கருத்து பிரதிபலிக்கவிலை யென பலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!