Latestமலேசியா

ஐ.ஜே.என்னில் டாக்டர் மகாதீர் அனுமதி

கோலாலம்பூர், ஜூலை 18 – திங்கட்கிழமை முதல் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஐ.ஜே.என் எனப்படும் தேசிய இருதய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு முறை பிரதமராக இருந்துள்ள டாக்டர் மகாதீர் அண்மையில் தனது 99 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இருமல் காரணமாக IJN னில் டாக்டர் மகாதீர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது பேச்சாளரான சுபி யூசோப் ( Sufi Yusof ) தெரிவித்திருக்கிறார். கடந்த சில ஆண்டு காலமாக மகாதீர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும் வெளியேறுவதுமாக இருந்து வருகிறார். 1989 மற்றும் 2007 ஆம் ஆண்டில் இருமுறை அவர் இருதய இரத்த நாள அறுவை சிகிச்சையையும் அவர் மேற்கொண்டார். ஆகக்கடைசியாக இவ்வாண்டு ஜனவரியில் அவர் IJN னில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த மார்ச் மாதம் IJN னிலிருந்து வெளியேறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!