கோலாலம்பூர், ஜூலை 14 – அனைத்து Rapid KL ரயில் மற்றும் பஸ் தடங்களில் தினசரி வரையரையின்றி பயணம் செய்யக்கூடிய MYCity Two Day கூடுதல் சலுகை திட்டத்திற்கான சிறப்பு பாஸ்களை Rapid KL மூலம் Prasarana Malaysia Berhad தொடங்கியது.
ஆகக்கடைசியான கவர்ச்சிகரமான வாய்புக்கான சிறந்த சேவையை வழங்கும் வகையில் நிறுவனத்தின் கூடுதல் சலுகை திட்டத்தின் ஒரு பகுதியாக இது இருப்பதாக Prasarana Malaysia Berhad வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
LRT , MRT, Monorail, Bus Rapid Transit நிலையங்கள் முகப்பிடங்கள் மற்றும் MyRapid application pulse மூலமாக இணையம் வாயிலாக ஜூலை 12 ஆம் தேதியிலருந்து MyCity Two Day பாஸ் விற்பனை செய்யப்படுகிறது.
மலேசிய பிரஜைகளுக்கு பதினோரு ரிங்கிட்டிற்கும், மலேசியர் அல்லாதாருக்கு RM 18 ரிங்கிட்டிற்கும் இந்த பாஸ் விற்கப்படுகிறது.