புத்ராஜெயா, நவம்பர்-10, சுகாதார அமைச்சில் ஒப்பந்த முறையில் பணிக்கு விண்ணப்பித்திருந்த 3,200 மருத்துவ அதிகாரிகள், அக்டோபர் 21-ஆம் தேதி முதல் பணியில் நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர்.
அவர்களோடு 350 பல் மருத்துவ அதிகாரிகள், 400 மருந்தக அதிகாரிகளையும், SPA எனப்படும் பொதுச் சேவை ஆணை ஆணையம் நிரந்தர ஊழியர்களாக சேர்த்துக் கொண்டுள்ளது.
இந்நிலையில் பணியிட மாற்றத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், e-Placement கணினி முறையில் கூகுள் பாரத்தைப் பூர்த்திச் செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு (KKM) கேட்டுக் கொண்டது.
மருத்துவ அதிகாரிகள் நவம்பர் 11-ஆம் தேதி வரையிலும், பல் மருத்துவ மற்றும் மருந்தக அதிகாரிகள் நவம்பர் 15-ஆம் தேதி வரையிலும் அதற்கு விண்ணப்பிக்கலாம்.
மேல்முறையீட்டு விண்ணப்ப முடிவுகள் KKM-மின் Semakan Kerjaya இணைய அகப்பக்கத்தில் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியிடப்படும்.
அனைத்து நடைமுறைகளும் முழுமைப் பெற்றதும் டிசம்பர் 30-ஆம் தேதி, சம்பந்தப்பட்டோர் அனைவரும் நிரந்தரப் பணியைத் தொடங்குவர்.
நிரந்தரப் பணி தொடங்கும் நாளை ஒத்தி வைக்கக் கேட்டோர், அவரவர் துறைத் தலைவர்கள் முடிவு செய்யும் புதியத் தேதிகளில் வேலையில் இணைவர் என சுகாதார அமைச்சு அறிக்கையில் கூறியுள்ளது.