Latestமலேசியா

ஒரு நாசி லெமாக்கின் விலை RM8? அதிருப்தியில் ஆடவர்

சபா, ஜூலை 10 – சபா சூக் கெனிங்காவில் உள்ள சாலையோர உணவு கடையில், விலை கேட்காமல் நாசி லெமாக் ஒன்றை வாங்கிய நபர் ஒருவருக்கு எதிர்பாராத அதிர்ச்சியாய் அமைந்தது அதன் விலை.

பொதுவாகவே ஒரு முழு முட்டை வைத்த நாசி லெமாக்கின் விலை 5 ரிங்கிடுக்கு குறைவாகத்தான் இருக்கும்.

ஆனால் இங்கோ அவருக்கு 8 ரிங்கிட்டிக்கு ஒரு பொட்டல நாசி லெமாக் விற்கப்பட்டிருக்கிறது.

இந்த விலையால் ஆத்திரமடைந்த அந்நபர் தனது x வலைத்தளத்தில் தான் வாங்கிய நாசி லெமாக்கின் படத்தோடு, ஒரு நாசி லெமாக் இவ்வளவு விலையா? என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இப்பதிவு வைரலாகி, சமுக வலைதளவாசிகளிடயே பல விதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!