Latestமலேசியா

ஒலிம்பிக் உடையில் மலேசியாவின் பல்லின மக்களின் கலாச்சாரம் பிரதிபலிக்கவில்லை – பலர் விமர்சனம்

கோலாலம்பூர், ஜூலை 26 – ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் மலேசிய விளையாட்டாளர்களுக்கான உடைகள் மற்றும் கோர்ட்டுகள் மலேசிய மக்களின் பல்லின கலச்சாரத்தை பிரதிபலிக்கவில்லை என பலர் கருத்துரைத்துள்ளனர். ஒலிம்பிக்கின் தொடக்க விழாவிற்கான மலேசியக் குழுவின் ஆடை பார்வைக்கு கவரும் வகையில் இருந்தாலும் பல இனங்களையும் கொண்ட மலேசியர்களின் ஒற்றுமை மற்றும் கலாச்சார உணர்வை அவை பிரதிபலிக்கவில்லை என்பதால் அது தோல்வியுற்றது என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறையின் முன்னாள் துணையமைச்சரான வான் அகமட் பெசால் வான் அகமட் கமால் ( Wan Ahmad Fayhsal Wan Ahmad Kamal ) இணையத் தள பதிவேடு ஒன்றிடம் தெரிவித்திருக்கிறார்.

இந்த உடை சீன மற்றும் இந்திய சமூகங்களை பிரதிநிதிக்கும் அம்சங்களை தவறவிட்டதாகவும், விளையாட்டுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ம.சீ.சவின் தலைமைச் செயலாளர் சோங் சின் வூன் (Chong Sin Woon) சாடினார். மேலும் கிழக்கு மலேசியாவின் கலச்சார அம்சத்தையும் அந்த உடை பிரிதிபலிக்கவில்லை என்பதோடு ஒட்டுமொத்தமாகவே மலேசியாவின் தனித்துவத்தை அந்த உடை வடிவமைப்பு கொண்டிருக்கவில்லையென சோங் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இந்த உடைகளை காட்சிப்படுத்த மாடல்களைவிட விளையாட்டு வீரர்களை பயன்படுத்தியிருக்க வேண்டும் என உரிமை கட்சியின் பொதுச் செயலாளர் சதிஸ் முனியாண்டி பரிந்துரைத்துள்ளார்.

ஒலிம்பிக் உடை குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தபோதிலும், சில இணைய பயனர்கள் உடையை அதன் எளிமை, நேர்த்தி மற்றும் உன்னதமான முறையீட்டிற்காக பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!