
கோலாலம்பூர், பிப்ரவரி-25 – கடந்தாண்டு மலேசியா வந்த சீன நாட்டு சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 3.7 மில்லியன் பேராகப் பதிவாகியுள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் இது 130.9 விழுக்காடு உயர்வு என சுற்றுலா, கலை, பண்பாடு அமைச்சு கூறியது.
2026 டிசம்பர் வரை சீன நாட்டினருக்கான விசா விலக்குக் கொள்கை நீட்டிப்பு மற்றும் மேம்பட்ட விமான இணைப்பு ஆகியவற்றால் இந்த வளர்ச்சி உந்தப்பட்டுள்ளது.
இந்த இலாபகரமான வளர்ச்சியை நிலைநிறுத்த, China Eastern Airlines விமான நிறுவனம், வடமேற்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தின் தலைநகரான Xián-னை Kunming வழியாக கோலாலம்பூருடன் இணைக்கும் புதிய விமானச் சேவையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
Xian, வடமேற்கு சீனாவில் ஒரு குறிப்பிடத்தக்க நகர்ப்புற மையமாக செயல்படுகிறது; குறிப்பாக நடுத்தர குடும்பங்களிடையே அங்கு விரைவான மக்கள்தொகை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த மக்கள் தொகையானது, அனைத்துலக அளவில் பயணிக்கப் போதுமான வளங்களைத் தருவிக்கும்; இதுவே அவர்களை சுற்றுலா பிரச்சாரங்களுக்கான முக்கிய இலக்குகளில் ஒன்றாக ஆக்குவதாக அந்நிறுவனம் கூறியது.