கோலாலம்பூர், ஜூலை 16 – கடந்த புதன்கிழமை வாடகைக் காரை ஒப்படைத்த பின் காணாமல்போனதாக அறிவிக்கப்பட்ட 25 வயதுடைய நுர் பாரா கார்த்தினி அப்துல்லா ( Nur Farah Kartini Abdullah ) உலு சிலாங்கூர் பெல்டா Gedangsa வில் நேற்று இறந்து கிடந்தார். மாலை 6 மணியளவில் அவரது உடல் கண்டுப்பிடிக்கப்பட்டதோடு தெரிந்த ஒருவரால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேய்ன் ஒமார் கான் ( Hussein Omar Khan ) தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக 26 வயதுடைய அரசு ஊழியரான சந்தேகப் பேர்வழி ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது விதியின் கீழ் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உசேய்ன் தெரிவித்தார்.
வாடகை காரை வாடிக்கையாளரிடம் ஒப்படைத்த பின் நுர் பாரா காணாமல்போதை தொடர்ந்து ஜூலை 10ஆம் தேதி நண்பகல் மணி 1.56 அளவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. சரவாக்கை சேர்ந்த நுர் பாரா தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் கல்வியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி ஆவார்.