Latestஉலகம்

கடப்பிதழை ஒப்படைக்கும் இந்திய நாட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு

புதுடில்லி , ஜூலை 12 – நல்ல வருமானத்தைக் கொண்ட வேலையுடன் வெளிநாடுகளில் குடியேறிவிட்ட இந்தியர்கள் தங்களது இந்திய கடப்பிதழ்களை ஒப்படைக்கும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் தங்கிவிட்ட இந்தியர்கள் தங்களது இந்திய கடப்பிதழ்களை ஒப்படைப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த நாடுகளில் தங்கிவிட்ட இந்திய பிரஜைகளில் 30 முதல் 45 வயதுடையவர்கள்தான் அதிகமாக உள்ளனர். வேலை, வாழ்க்கைச் சூழல், உள்கட்டமைப்பு வசதிகளால் கவரப்பட்டு அந்த நாடுகளிலேயே இருந்துவிடுவது என்று முடிவு செய்து அவர்கள் தங்களது இந்திய கடப்பிதழ்களை ஒப்படைத்து விடுகின்றனர். இந்த பட்டியலில் டில்லியைச் சேர்ந்தவர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். 2014 முதல் 2022-ம் ஆண்டு வரை டில்லியைச் சேர்ந்த 60,414 பேர் தங்களது கடப்பிதழ்களை ஒப்படைத்துள்ளனர். இதற்கு அடுத்து பஞ்சாப்பை சேர்ந்தவர்களில் 28,117 பேரும் குஜராத்தைச் சேர்ந்த 22,300 பேரும் கடப்பிதழ்களை ஒப்படைத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!