சென்னை, ஆகஸ்ட்-13 – தமிழகக் கரையோரப் பகுதிகளில் சுமார் 422 கிலோ மீட்டர் தூரம் வரை மண்ணரிப்பு ஏற்பட்டு வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி மண்ணரிப்பு, பூமி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் கடல் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.
இதனால் சென்னை, திருவாரூர், நாகப்பட்டினம், செங்கல்பட்டு கடல் பகுதிகளில் 2050-ஆம் ஆண்டுக்குள் கடல் நீர் மட்டம் சுமார் 20 செண்டி மீட்டர் அளவுக்கு உயரலாம் என தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
அதிலும் சென்னையில் மட்டும் 2100-ம் ஆண்டு வாக்கில் கடும் பாதிப்புகள் ஏற்படலாமென ஐயுறப்படுகிறது.
நூற்றாண்டு கால தொழில்புரட்சியின் விளைவாக நிகழ்ந்த பருவநிலை மாற்றத்தின் விளைவை 2050 தொடங்கி சென்னை எதிர்கொள்ள வேண்டி வருமென ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஒரு கட்டத்தில் சென்னை இருக்குமிடம் தெரியாமல் போவதைத் தடுக்க முடியாது.
ஆனால், பிரச்னை என்னவென்றால் இது தமிழகத்தை மட்டும் உட்படுத்தியதல்ல; மாறாக உலகலாயப் பிரச்னை.
உலகவில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சீரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இயற்கையை எதிர்த்து மனிதனால் நீண்ட நாள் போராட முடியாது என அவர்கள் எச்சரித்தனர்.