Latestஉலகம்

கடும் கடல் அலைகளால் கலிபோர்னியாவில் கடற்கரை வீடுகள் இடியும் அபாயம்

லாஸ் ஏஞ்சல்ஸ், அக்-13-அமெரிக்காவின் கலிபோர்னியாவில் Long Beach நகரில் கடும் கடல் அலைகள் காரணமாக பல கடற்கரை வீடுகள் இடிந்து விழும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. சேதமடைந்த பகுதிகளில் அவசரப் பழுதுபார்ப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சில வீடுகள் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆபத்தான பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேற கட்டாய உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Rachel வெப்பமண்டலப் புயல் எதிர்பார்த்ததைவிடக் குறைவான மழையைக் கொண்டு வந்தபோதிலும், அசாதாரண புயல், உயரமான அலைகள், எல் நினோ தாக்கம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் கடலோரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நகரின் தீபகற்பப் பகுதியில் வீடுகள் ஆபத்தான நிலையில் இருப்பதுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க நடைபாதையின் ஒரு பகுதியும் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

அச்சேதங்கள் முன்னெப்போதும் இல்லாத அனுபவம் எனக் கூறப்படுகிறது. மேலும், கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டிய அவசியத்தையும் அது உணர்த்தியுள்ளது. மக்கள் வெளியேற்ற எச்சரிக்கைகளைக் கடைப்பிடித்து, மணல் மூட்டைகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டுள்ளது. கடலோரத்தில் ஆபத்தான சூழ்நிலைகள் பல நாட்கள் நீடிக்கலாம் என தேசிய சூறாவளி மையமும் எச்சரித்துள்ளது.

இதனிடையே, சேதமடைந்த நடைபாதை மற்றும் தடுப்புச் சுவரைப் பழுதுபார்ப்பதுடன், கடற்கரையை விரிவுபடுத்தும் திட்டத்தையும் நகர நிர்வாகம் விரைவுபடுத்தியுள்ளது. அந்நடவடிக்கைகள் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பையும் நீண்டகால மீள்திறனையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு கலிபோர்னியாவை இத்தகைய பசிபிக் புயல்கள் கடுமையாகப் பாதிப்பது அரிதாக நிகழக்கூடியது. எல் நினோவால் பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை உயர்வதும், மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றமும் கடுமையான வானிலை நிகழ்வுகளின் தாக்கத்தை அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!