
கோலாலம்பூர், அக்-13–இன்று காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் 19 பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (API) ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கிறது. ஜோகூரில் Pasir Gudangங்கில் அதிகபட்சமாக API 180 ஆக இருப்பதாக சுற்றுச்சூழல் துறையின் காற்றுத் தரக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜோகூரில் மட்டும் எட்டு பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் உள்ளது. Larkin (176), Kota Tinggi (169), Pengerang (166), Batu Pahat (161), Kluang (154), Tangkak (151), SEGAMAT (133) ஆகியவை அப்பகுதிகளாகும். சரவாக்கில் Sri Aman (172), Serian (154) என்ற குறியீடு காணப்படுகிறது. பகாங்கில் குவாந்தானின் Balok Baru (161), Rompin (157) என்றும், மலாக்காவில் Bukit Rambai மற்றும் Bandaraya Melakaவில் (160), Alor Gajah (151) என்றும் பதிவாகியுள்ளது.
நெகிரி செம்பிலானில் சிரம்பான் (154), நீலாய் (146) என்றும், சபாவில் Tawau (154) என்றும் உள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் Johan Setia (90), கிள்ளான் (87), Batu Muda (82), செராஸ் மற்றும் ஷா ஆலாமில் 81 என காற்றின் தரம் மிதமான அளவில் இருக்கிறது. தைப்பிங், Balik Pulau, Jerantut, Langkawi ஆகிய நான்கு பகுதிகளில் நல்ல காற்றுத் தரம் காணப்படுகிறது. புத்ராஜெயாவில் 99 என்ற அளவு பதிவாகியுள்ளது.
இதனிடையே, புகைமூட்டம் காரணமாக ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் மற்றும் புத்ராஜெயாவில் உள்ள பள்ளிகள் இன்று மூடப்படும் என கல்வி அமைச்சர் நேற்று அறிவித்திருந்தார். API அளவு 0 முதல் 50 வரை நல்லது, 51 முதல் 100 வரை மிதமானது, 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்றது என்றும் 300க்கு மேல் அபாயகரமானது என வகைப்படுத்தப்படுகிறது.



