Latestமலேசியா

13 ஆண்டுகளுக்குப் பிறகு ருக்குன் தெத்தாங்கா மானியம் 10,000 ரிங்கிட்டாக உயர்வு

கோலாலம்பூர், அக்டோபர்-13,நாட்டில் செயல்பட்டு வரும் ருக்குன் தெத்தாங்கா தொண்டூழியப் படைகளுக்கன வருடாந்திர மானியம், 13 ஆண்டுகளுக்குப் பிறகு 6,000 ரிங்கிட்டிலிருந்து 10,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படுகிறது.

வரும் ஜனவரி முதல் அமுலுக்கு வரும் இந்த உயர்வு, 2027 வரவுச் செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம், அவற்றுக்கான மானியம் 66.7 விழுக்காடு அதிகரிப்பதாக தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் தெரிவித்தார்.

சமூக ஒற்றுமை, பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் மக்களின் நலனை வலுப்படுத்துவதற்கு இந்தக் கூடுதல் நிதி உதவும் என அவர் கூறினார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு 4,800 ரிங்கிட்டிலிருந்து 6,000 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்ட இந்த மானியம், அதன் பின்னர் மாற்றமின்றி இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்தாண்டில் நாடு முழுவதும் ருக்குன் தெத்தாங்கா அமைப்புகள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில், குடியிருப்புப் பகுதிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், தன்னார்வ ரோந்துப் படையான SRS அமைப்புக்கும் கூடுதல் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!