தெலுக் இந்தான், ஜூலை 15 – அடுத்த மாதம் திருமணம் செய்யவிருந்த ஆடவர் ஒருவர் தெலுக் இந்தானில் உள்ள ஒரு கடையில் இரண்டு டின் பீர் மற்றும் 145 ரிங்கிட் ரொக்கம் கொள்ளையிட்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அவருக்கு 4 ஆண்டு சிறை மற்றும் ஒரு பிரம்படி விதிக்கப்பட்டது. செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி இன்தான் நுருல் பரினா ஜைனால் அபிடின் ( Intan Nurul Farena Zainal Abidin ) முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 33 வயதுடைய நெர்வின் ராவ் ( Nervin Rao ) அதனை ஒப்புக் கொண்டார்.
கார் கழுவும் வேலை செய்பவரான அந்த ஆடவர் ஜூலை 9 ஆம் தேதி தெலுக் இந்தான் , ஜாலான் பண்டாரில் , 24 மணி நேரம் செயல்படும் கடையில் விடியற்காலை மணி 5.14 அளவில் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். கைது செய்யப்பட்ட ஜூலை 11 ஆம் தேதியிலிருந்து தண்டனையை அனுபவிக்கும்படி நெர்வின் ராவுக்கு நீதிபதி இந்தான் நுருல் பரெனா ( Intan Nurul Farena ) உத்தரவிட்டார்.