கம்பார், ஜூன் 6 – கம்பார் , Jalan Tanjung Tualang கில் சாலை விபத்திற்குப் பின் சாலையை நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தப்படும் தாரில் சிக்கிக் கொண்டதால் Penghulu எனப்படும் கிராமத் தலைவர் மரணம் அடைந்தார். கம்பார் மாவட்டத்தில் Penghulu Mukin Teja வில் பணியாற்றிய 40 வயதுடைய ஹனாபியா இஸ்மாயில் ( Hanapiah Ismail) மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது தார் ஏற்றிச் சென்ற லோரி கவிழ்ந்ததில் அதில் இருந்த தாரில் சிக்கிக்கொண்டதால் இறந்தார்.
நேற்றிரவு மணி 8.13 அளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்ற தீயணைப்பு மீட்புக் குழுவினர் சென்றதாக பேரா தீயணைப்புத்துறையின் நடவடிக்கை பிரிவுக்கான உதவி இயக்குனர் சபரோட்சி நோர் அகமட் (Sabarodzi Nor Ahmad) தெரிவித்தார்.
தார் ஏற்றிச் சென்ற லோரி கவிழ்ந்து கிடந்ததோடு Honda Wave மோட்டார் சைக்கிளில் சென்ற ஹனாபியா கீழே கொட்டப்பட்ட தாருக்குள் சிக்கிக்கொண்டதால் சிறப்பு சாதனத்தை பயன்படுத்தி அவரை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர் . எனினும் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே அவர் இறந்தார் என உறுதிப்படுத்தப்பட்டதாக சபரோட்சி கூறினார்.