Latestமலேசியா

கம்போங் அத்தாப்பில் நில அமிழ்வா? வைரலானது பழையப் புகைப்படம் என DBKL விளக்கம்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-29 – தலைநகரில் இன்னோர் இடத்தில் நில அமிழ்வு ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவியுள்ள தகவலை, கோலாலம்பூர் மாநகர மன்றம் (DBKL) மறுத்துள்ளது.

கப்போங் அத்தாப்பில் (Kampung Attap) உள்ள Jalan Dewan Bahasa சாலையின் நடுவே நிலம் உள்வாங்கியதாகக் கூறி இன்று காலையிலிருந்து புகைப்படமொன்று வைரலானது.

ஆனால், அது பழையப் படமென DBKL உறுதிபடுத்தியது.

சேதமடைந்த அச்சாலை ஏற்கனவே பழுதுப்பார்க்கப்பட்டு விட்டதைக் காட்டும் புதியப் புகைப்படங்கள் சிலவற்றையும் DBKL தனது முகநூலில் பகிர்ந்தது.

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை 8 மீட்டர் ஆழத்துக்கு ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்து, 48 வயது இந்தியப் பிரஜையான விஜயலட்சுமி என்பவர் காணாமல் போனார்.

அவரைத் தேடி மீட்கும் பணிகள் இன்று 7-வது நாளை எட்டியிருக்கிறது.

இந்நிலையில் நேற்று சம்பவ இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் சிறிய பள்ளமேற்பட்டது.

இப்படி அடுத்தடுத்து நில அமிழ்வு சம்பங்கள் நிகழ்ந்துள்ள போதிலும், ஜாலான் மஸ்ஜித் இந்தியாவைப் பாதுகாப்பற்ற பகுதியாகவோ அல்லது பேரிடர் பகுதியாகவோ அறிவிக்க அவசியமில்லையென, தேசியப் போலீஸ் படைத் தலைவர் இன்று காலை கூறியிருந்தார்.

நில அமிழ்வு சம்பவம் பேரிடராக வகைப்படுத்தப்படாததே அதற்குக் காரணமென்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!