லிபிஸ், ஆகஸ்ட் 20 – கம்போங் செட்டிக் அருகே வசிப்பவரின் தோட்டத்தில் புலி சுற்றித் திரிவதை தொடர்ந்து, 500 பூர்வக்குடி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
49 வயது நோர்பினி அஜிக் என்பவரின் தோட்டத்தில், அந்த புலி நடமாடுவதை பொதுமக்கள் கண்டு, அவரை எச்சரித்துள்ளனர்.
இதனிடையே அங்கு புலி இருக்கும் சூழலில், அதன் அச்சுறுத்தலுக்குப் பயந்து பலர் வேலைக்குச் செல்வதையும் தவிர்த்து வருகின்றனர்.
ஆகையால், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்களின் Perhilitan துறை அதிகாரிகள், குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்காக வன விலங்குகளை கண்காணிக்க வேண்டும் என்று நோர்பினி கேட்டு கொண்டுள்ளார்.