Latestமலேசியா

கம்போங் பாரு கமுன்திங்கில் வீடுகள் தீயில் அழிந்தன; ஏழு குடும்பங்கள் அனைத்து உடமைகளையும் இழந்தனர்

தைப்பிங், ஜூன் 20 – கம்போங் பாரு கமுன்திங்கில் கம்போங் சுங்கை ரன்திங்கில் ( Kampung Baru Kamunting, Kampung sungai Ranting ) நேற்று பிற்பகல் மணி 2.50 அளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் தங்களது உடமைகள் அனைத்தையும் இழந்தனர். இந்த தீவிபத்தில் எட்டு வீடுகளில் ஏழு வீடுகள் முற்றாக அழிந்ததன. காலியாக இருந்த ஒரு வீடு சிறிய அளவில் சேதம் அடைந்தது. இந்த தீவிபத்தில் எவரும் காயம் அடையவில்லையென பேரா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவுக்கான உதவி இயக்குனர் சபரோட்ஷீ நோர் அகமட்
( Sabarodzi Nor Ahmad ) தெரிவித்தார்.

நேற்று மாலை மணி 6.57 அளவில் தீ முற்றாக அணைக்கப்பட்டது. கமுன்திங், தைப்பிங், பாகான் செராய், பத்து கூராவ் ( Kamunting, Taiping. Bagan Serai. Batu Kurau ) ஆகிய இடங்களிலிருந்து வந்த ஐந்து தீயணைப்பு வண்டிகளைச் சேர்ந்த 22 தீயணைப்பு வீர்ர்கள் தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!