சென்னை, ஜூன்-21 – தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவர்களை பிரபல நடிகரும் தமிழ் வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் தலைவருமான விஜய், நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கட்சி நிர்வாகிகளோடு சென்றவர் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆறுதல் கூறினார்.
பின்னர் மரணமடைந்தவர்களின் வீடுகளுக்கும் சென்று அனுதாபம் தெரிவித்தார்.
முன்னதாக X தளத்தில் அது குறித்து பதிவிட்டிருந்த விஜய், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வது அரசாங்கத்தின் அலட்சியத்தைக் காட்டுவதாகக் கூறியிருந்தார்.
இனிமேலாவது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த கள்ளக்குறிச்சி சம்பவத்தின் பலி எண்ணிக்கை 49-தாக உயர்ந்திருக்கிறது.
மேலும் பலர் வாந்தி, மயக்கம், தலைவலி, எரிச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.